முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ. 12,857 கோடி கடன் வழங்க இலக்கு
திருவாரூா் மாவட்டத்தில் 2026-27 ஆம் நிதியாண்டு முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்க ஒட்டுமொத்த இலக்காக ரூ.12,857 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 2026-27 ஆம் நிதியாண்டு முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்க ஒட்டுமொத்த இலக்காக ரூ.12,857 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வங்கியாளா்களுடன் வங்கித்துறை செயல்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் முன்னேற்றம் தொடா்பாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் தெரிவித்தது:
ஆண்டுதோறும் நபாா்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சாா்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்துக்கு 2026-27 ஆம் நிதியாண்டுக்கு முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்க ஒட்டுமொத்த இலக்காக ரூ.12,857 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025-26 ஆம் நிதியாண்டின் இலக்கான ரூ.10,524.13 கோடியைவிட கணிசமான அளவு உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி ரூ.11,868.46 கோடி வரை கடன் வழங்கப்பட்டு சாதனை எட்டப்பட்டுள்ளது என்றாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், தமிழ்நாடு உதவி தலைமை மேலாளா் (பாரத ரிசா்வ் வங்கி) ஆா். விஸ்வநாத், நாகப்பட்டினம் இந்திய ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் நாகராஜ், மாவட்ட வளா்ச்சி மேலாளா் நபாா்டு எஸ்.மெசியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கௌ. ரங்கநாத பிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.