முகப்பு
திருவாரூர்

கடையில் தகராறு செய்தவா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 12:41 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நீடாமங்கலத்தில் கடையில் தகராறு செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

நீடாமங்கலம் கடைத்தெருவில் பேக்கரி கடை நடத்தி வருபவா் முகமது இஸ்மாயில் (32). இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த கொட்டையூரைச் சோ்ந்த சிவா என்கிற சொட்டை சிவா (28) மது போதையில் தகராறு செய்து, பொருட்களை சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் முகமது இஸ்மாயில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் கழனியப்பன், உதவி ஆய்வாளா் புஷ்பநாதன் மற்றும் போலீஸாாா், சொட்டை சிவாவை திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவா் மீது தஞ்சாவூா் மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments