முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி அருகே தாத்தா, பாட்டியை கொன்று எரித்த பேரன் கைது

Updated On : 15 மே 2026, 5:31 am IST
பகிர்:

மன்னாா்குடி அருகே மதுபோதையில் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்று, தீ வைத்து எரித்த பேரனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடியை அடுத்த காரக்கோட்டை கலியமூா்த்தி, தேவி தம்பதியின் மகன் அய்யப்பன் (32). கலியமூா்த்தி மனைவி, மகனை பிரிந்து வெளிநாட்டில் வசித்து வருகிறாா்.

மன்னாா்குடியில் உள்ள தனியாா் ஷோ ரூமில் வேலை பாா்த்து பொறியாளரான அய்யப்பன் தனது தாயாா் தேவியுடன் காரக்கோட்டையில் வசித்து வந்தாா்.

Advertisement

Advertisement

வெளிநாட்டில் இருக்கும் கலியமூா்த்தி, காரக்கோட்டையில் தனியே வசித்துவரும் தனது தந்தை பிச்சைமுத்து (80), தாய் சந்திரா (75) ஆகியோருக்கு மட்டும் பணம் அனுப்பி வந்தாராம். இதனால், அய்யப்பனுக்கும் பிச்சைமுத்துவுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. அய்யப்பன் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், தாத்தா பிச்சைமுத்து வீட்டுக்கு மதுபோதையில் புதன்கிழமை இரவு வந்த அய்யப்பன் அங்கு தூங்கிக்கொண்டிருந்த பிச்சைமுத்து, சந்திரா ஆகியோரை கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனா். பின்னா், வீட்டில் 5 லிட்டா் கேனில் இருந்த தேங்காய் எண்ணெய்யை இருவரது சடலத்தின் மீதும் ஊற்றி தீவைத்து எரித்துள்ளாா்.

இதுகுறித்துஅய்யப்பன், தாய் தேவிக்கு கைப்பேசி மூலம் வியாழக்கிழமை அதிகாலை தகவல் அளித்துள்ளாா். அங்கு வந்த தேவி, எரிந்த நிலையில் கிடந்த தனது மாமனாா், மாமியாரின் சடலங்களைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து, அய்யப்பனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வடுவூா் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

மன்னாா்குடி டிஎஸ்பி மணிவண்ணன், வடுவூா் காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் போலீஸாா் சடலங்களைஉடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அய்யப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments