ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் நிறுவனம், சிஐஎஸ்எஃப் இடையே கருத்து வேறுபாடு!
தில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில் நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படைக்கு (சிஎஸ்எஃப்) தர வேண்டிய கட்டணம் ரூ. 12 கோடி தரப்படவில்லை என்றும்; அதனால், தில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் நிறுவனம்- சிஐஎஸ்எஃப் இடையே கருத்து வேறுபாடு ஏற்
தில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில் நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படைக்கு (சிஎஸ்எஃப்) தர வேண்டிய கட்டணம் ரூ. 12 கோடி தரப்படவில்லை என்றும்; அதனால், தில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் நிறுவனம்- சிஐஎஸ்எஃப் இடையே கருத்து வேறுபாடு ஏற்
பட்டுள்ளது என்றும் தெரிகிறது.
புது தில்லி ரயில் நிலையம் முதல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரை, ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில் சேவையை தில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் நிறுவனம் அளித்து வருகிறது.
Advertisement
Advertisement
இதில் கனாட் பிளேஸ் அருகே சிவாஜி ஸ்டேடியம் முதல் 23 கிலோ மீட்டர் உள்ள இந்த மெட்ரோ லைனில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனில் கடந்த ஆண்டு பராமரிப்புப் பணிகள் காரணமாக, சுமார் ஆறு மாத காலத்துக்கு சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் ரயில் நிலையப் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டிருந்த வீரர்களின் எண்ணிக்கையை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை கணிசமாகக் குறைத்துக் கொண்டது.
இந்த நிலையில், ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த ஆறு மாதங்களும் பாதுகாப்பு வழங்கியதற்கான கட்டணமாக ரூ. 12 கோடி தர வேண்டும் என்று தில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தலைமையகம் அண்மையில் கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், அதை வழங்க ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தயக்கம் காட்டியது. அதையடுத்து, ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் நிர்வாகமும், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் மத்திய உள்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடத்தினர்.
அதில் மத்திய படைக்கு நிலுவைக் கட்டணம் வழங்குவதற்கான வங்கி உத்தரவாதத்தை அளிக்கும்படி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்த நிர்வாகம், "பயணிகளுக்குச் சேவை வழங்காத காலத்தில் போதுமான படை வீரர்கள் ரயில் நிலையங்களில் இல்லை; மேலும், இவ்வளவு தொகையை ஒதுக்க இயலாது. அதனால், கட்டண நிலுவையை செலுத்தும் போது குறிப்பிட்ட ஒரு தொகையை மானியமாக மத்திய அரசு வழங்க வேண்டும்' என்று கூறியது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "பாதுகாப்புக்கான கட்டணத்தைத் தர ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் மறுக்கவில்லை; ஆனால், அந்தக் கட்டணத்தை யார், எப்படி பகிர்ந்து தருவது என்பதில்தான் பிரச்னை நிலவுகிறது. விரைவில், இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்' என்றார்.