வாகனத் திருட்டு: ஒருவர் கைது
தில்லியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கிழக்கு தில்லி சாதராவைச் சேர்ந்த ராஜீவ் குமார் என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தில்லியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கிழக்கு தில்லி சாதராவைச் சேர்ந்த ராஜீவ் குமார் என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
""ஆனந்த் விஹார் பேருந்து நிலையப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான முறையில் அந்த நபர் வந்தார்.
விசாரணையில் கிருஷ்ணா நகர், ஜாஃப்ராபாத், லாஜ்பத் நகர், கோகுல்புரி பகுதிகளில் 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 ஸ்கூட்டர்களை அவர் திருடியுள்ளதும், வேறு வழக்குகளில் சிறை சென்றுள்ளது தெரியவந்தது. அவர் திருடிய மோட்டார் சைக்கிள்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன'' என்று போலீஸார் கூறினர்.
Advertisement
Advertisement