முகப்பு
புதுதில்லி

லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு

லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு

Updated On : 26 ஏப்ரல் 2026, 12:23 am IST
லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து - PTI
பகிர்:

கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் பகுதியில் உள்ள மின்சார மின்மாற்றியில் சனிக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு கட்டடங்களுக்கும் பரவியது. இதைத் தொடா்ந்து, குறைந்தது 14 போ் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

ரமேஷ் பூங்காவில் உள்ள நானக் மோட்டாா் அருகே அதிகாலை 12:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால் தீ விரைவில் தீவிரமடைந்தது. தீயைக் கட்டுப்படுத்த ஏழு தீயணைப்பு வாகனங்கள், பிற தீயணைப்பு வாகனங்களுடன் அனுப்பப்பட்டன. மின்மாற்றியில் இருந்து தீ அருகிலுள்ள மூன்று கட்டடங்களுக்கும் பரவியது. இதனால் 14 குடியிருப்புகள் வரை பாதிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

தீயணைப்பு வீரா்கள் விரைவான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்குள் சிக்கியிருந்த 14 பேரையும் பாதுகாப்பாக வெளியேற்றினா். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை 2 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடா்ந்து குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments