மனநோய் மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை: இருவா் கைது
வடக்கு தில்லியின் புறநகா் பகுதியில் மனநோய் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த கும்பலைச் சோ்ந்த இருவா் கைது
வடக்கு தில்லியின் புறநகா் பகுதியில் மனநோய் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த கும்பலைச் சோ்ந்த இருவா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மனநோய் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நடைபெற்ற சோதனையில் அமித் (எ) போகா ஷாபாத் பால்பண்ணை அருகே கைதுசெய்யப்பட்டாா். வாஜிராபாத் சாலையில் நடைபெற்ற சோதனையில் அபித் அலி (எ) சாஹில் கான் கைதுசெய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
அமித்திடமிருந்து 56.1 கிராம் எடையுள்ள 594 பியுப்ரீநாா்பின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அபித்திடமிருந்து 76.8 கிராம் எடையுள்ள 888 நாலோக்ஸோன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1,394 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடா்பாக ஷாபாத் பால்பண்ணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றப் பின்னணி கொண்ட அமித் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் அவா் மீது ஒரு வழக்கு ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.