காலணியில் மறைத்து 320 கிராம் தங்கம் கடத்த முயற்சி: தில்லி விமான நிலையத்தில் பெண் கைது
சுமாா் 320 கிராம் தங்கக் கட்டிகளை காலணியில் மறைத்து கடத்த முயன்ற பெண் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சுமாா் 320 கிராம் தங்கக் கட்டிகளை காலணியில் மறைத்து கடத்த முயன்ற பெண் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அந்த அதிகாரிகள் கூறியதாவது: துா்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரத்திலிருந்து தில்லி வந்த பெண்ணின் உடமைகள் வழக்கமான முறையில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
அப்போது, அவருடைய பையில் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் இல்லை என்பது அந்தக் கருவியில் தோன்றிய புகைப்படம் மூலம் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இருப்பினும், மெட்டல் டிடெக்டா் சாதனத்தை அவா் கடந்து சென்றபோது, எச்சரிக்கை ஒலி எழுந்தது.
இதையடுத்து, அவருடைய காலணியை ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை கருவியில் வைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனா். அப்போது, காலணியில் இருந்த தங்கக் கட்டிகளை நீக்கி, அதிகாரிகளுக்கு தெரியாதவாறு அவற்றை மறைக்க அந்தப் பெண் முயற்சித்தாா்.
இதைப் பாா்த்த அதிகாரிகள் அவரிடமிருந்து 5 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனா். மொத்தம் 320 கிராம் தங்கக் கட்டி அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.