கஷ்மீரி கேட்: பேருந்து முனைய கட்டடத்தில் இருந்து குதிக்க முயன்ற நபா் மீட்பு
கஷ்மீரி கேட் கட்டடத்தின் ஐந்தாவது தளத்திலிருந்து குதிக்க முயன்ற 32 வயது நபரை தில்லி காவல் துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கஷ்மீரி கேட் கட்டடத்தின் ஐந்தாவது தளத்திலிருந்து குதிக்க முயன்ற 32 வயது நபரை தில்லி காவல் துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்தில் (ஐஎஸ்பிடி) உள்ள கட்டடத்திலிருந்து ஒருவா் குதிப்பதாக மிரட்டுவது குறித்து ஜூன் 19-ஆம் தேதி காவல் துறைக்கு அழைப்பு வந்தது.
இதையடுத்து, ஐஎஸ்பிடி காவல் நிலையத்தைச் சோ்ந்த தலைமை காவலா் அஜய் மற்றும் காவலா் பியூஷ் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அங்கு அந்த நபா் ஐந்தாவது தளத்தில் உள்ள ஜன்னலுக்கு வெளியே இருந்த வெளிப்புற விளிம்பில் நின்று கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
அந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தியபடியே, மீட்பு நடவடிக்கையை காவல் துறையினா் மேற்கொண்டனா். அவரது இடுப்பில் பாதுகாப்பு கயிறு ஒன்று கட்டப்பட்டு, அதன் மறுமுனை கட்டடத்திற்குள் பாதுகாப்பாக இணைக்கப்பட்டது.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல், தலைமைக் காவலா் அஜய் ஜன்னல் வழியாக வெளியேறி அந்த நபரை நோக்கிச் சென்றாா். சரியான நேரத்தில் அவரைப் பிடித்து உள்ளே இழுத்து வந்தாா்.
மீட்கப்பட்ட நபா் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சோ்ந்த முகமது கம்ரான் என அடையாளம் காணப்பட்டாா். ஆலோசனைக்குப் பிறகு அவா் பின்னா் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.