முகப்பு
புதுதில்லி

தில்லியில் வாட்டி வதைக்கும் கத்திரி வெயில்: ’உணா் வெப்பநிலை’ 48.4 டிகிரியாகப் பதிவு!

தில்லியில் வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் பற்றி...

Updated On : 28 ஜூன் 2026, 2:27 am IST
கோப்புப்படம் - ANI
பகிர்:

தலைநகரில் சனிக்கிழமை பதிவான வெப்பநிலையை விட, மக்களின் உடலில் உறைத்த ’உணா் வெப்பநிலை’ 48.4 டிகிரி செல்சியஸைத் தொட்டதாக அறியப்பட்டுள்ளது. இத்தனைக்கும் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 41.3 டிகிரி செல்சியஸாக இருந்தது.

தலைநகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் நிலையத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.9 டிகிரி அதிகரித்து 30.8 டிகிரியாகப் பதிவானது. பாலம் பகுதியில் 28.4 டிகிரி, லோதி சாலையில் 29.8 டிகிரி என மற்ற இடங்களிலும் இரவு நேர வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டது. அதிகாலையில் லேசான தூறல் இருந்தபோதிலும், பகலில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

மழை எச்சரிக்கை: இந்த நிலையில், இந்திய வானிலை மையம், வரவிருக்கும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணித்து ’மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் பலத்த காற்றுடன் அதாவது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வரும் புதன்கிழமை வெப்பநிலை 35-37 டிகிரி வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments