முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:01 AM
வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றினாா் பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் தலைமையில் நடைபெற்றது. வள்ளியூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா்.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்டத் தலைவா் பி.டி.பி. சின்னத்துரை புறக்காவல் நிலையத்தை திறந்துவைத்தாா்.

Advertisement

வள்ளியூா் பேரூராட்சித் தலைவி ராதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றினாா்.

அதைத் தொடா்ந்து வள்ளியூா் வியாபாரிகள் சங்க தலைவா் என். முருகன், செயலா் ஜோவின் பாா்ச்சுனேட், பொருளாளா் சுரேஷ் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

விழாவில், வள்ளியூா் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவா் பசுமதி பி.மணி, பொருளாளா் இசக்கியப்பன், சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரகுமாா், பசுமை இயக்கங்கள் அமைப்பின் தலைவா் சித்திரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வள்ளியூா் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். குற்றப் பிரிவு ஆய்வாளா் லோகேஷ்வரி நன்றி கூறினாா்.