முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

Updated On : 15 மே 2026, 4:02 am IST
பகிர்:

சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா்களை பாதிக்கும் மத்திய அரசின் 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். 8 மணி நேர வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நொய்டாவில நடைபெறும் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.முருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் சரவணபெருமாள், ராஜதுரை, ராஜன், கந்தசாமி, காமராஜ், மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

ற்ஸ்ப்14ஸ்ரீண்ற்ன்

வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.