"சாலை சீரமைப்புப் பணி: வழிகாட்டி பலகை தேவை'
நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பு - பீச்ரோடு சந்திப்பு சாலை அமைக்கும் பணி நடைபெறும் நிலையில், போக்குவரத்து மாற்றம் குறித்து
நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பு - பீச்ரோடு சந்திப்பு சாலை அமைக்கும் பணி நடைபெறும் நிலையில், போக்குவரத்து மாற்றம் குறித்து வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச்செயலர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை: நாகர்கோவில் நகரின் முக்கிய சாலையான பீச் ரோடு சந்திப்புப் பகுதியில் இருந்து செட்டிக்குளம் சந்திப்பு வரை சாலை சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் கன்னியாகுமரி மற்றும் அஞ்சுகிராமம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச்ரோடு சந்திப்பு வந்தவுடன் நாகர்கோவிலுக்கு எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று தெரியாமல் தடம் மாறிச் செல்கின்றனர்.
எனவே, பீச்ரோடு சந்திப்பிலிருந்து, ஆயுதப்படை முகாம் ரோடு திரும்பும்பகுதி, பொன்னப்பநாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர் போன்ற பகுதிகளில் வழிகாட்டி பலகை தெளிவாக குறிப்பிட்டு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து காவலரை இரவு நேரங்களிலும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.