முகப்பு
கன்னியாகுமரி

வடக்குத் தாமரைகுளம் கூட்டுறவுத் தேர்தல்: அதிமுக வெற்றி

வடக்குத் தாமரைகுளம் கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில்,  அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:19 am IST
பகிர்:

வடக்குத் தாமரைகுளம் கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில்,  அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
 வடக்குத்தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 2 அணியினர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
 இதில், தற்போதைய கூட்டுறவுச் சங்கத் தலைவர் அதிமுகவைச் சேர்ந்த என்.பார்த்தசாரதி தலைமையிலான அணியில் இடம்பெற்ற எஸ்.பாலசுப்பிரமணியன், சி.கணேசன், எம்.என்.முருகேஷ், ஜி.சுந்தர்ராஜ், ஆர்.வடிவேலன், ஜி.செல்வராஜ், டி.சுனிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த அணியைச் சேர்ந்த எல்.காந்திமதி, கே.செல்வராணி, எம்.சீதாலட்சுமி ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments