முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் சாய்பாபா சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சிறப்பு அஞ்சல் உறை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:13 am IST
பகிர்:

கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சிறப்பு அஞ்சல் உறை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
சாய்பாபா மகா சமாதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு, முதன்மை அஞ்சல் அதிகாரி எம். சம்பத் தலைமை வகித்து, சாய்பாபா சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். முதல் உறையை குமரி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எம்.கோமதிநாயகம் பெற்றுக்கொண்டார்.
விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத், அஞ்சல் துறையின் தென்மண்டல இயக்குநர் பவன்குமார், கன்னியாகுமரி கோட்ட முதன்மை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர், சத்குரு டி.கே.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். பொற்றையடி ஸ்ரீ சேவா டிரஸ்ட் தலைவர் பொன்னம்பலம் வரவேற்றார். மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments