நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிப்பு
எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
வடசேரியிலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தலைமையில்
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஏ.அசோகன், நகரச் செயலர் சந்துரு, தோவாளை ஒன்றியச் செயலர் கிருஷ்ணகுமார், அணிச்செயலர்கள் ஜெயசீலன், சுகுமாரன், மாவட்டப் பொருளாளர் வழக்குரைஞர் ஜெயகோபால் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
குமரி, தக்கலையில்...
கன்னியாகுமரி, தக்கலையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகில் அதிமுக நகரச்செயலர் பி.வின்ஸ்டன் தலைமையில் நிர்வாகிகள் எஸ். பீட்டர், அரிஜெயராஜா, பூலோகராஜா, ஜோஸ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
தக்கலை: பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கு குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஜாண்தங்கம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். நகர அவைத் தலைவர் அமல்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சத்யாதேவி, அரசு வழக்குரைஞர் அருள்பிரகாஷ், செல்வராஜன், ஒன்றிய செயலர் பி.சி.என் திலக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.