யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் பஞ்சபூத சாந்தி பரிகார பூஜை: பசுமை தீர்ப்பாய நீதிபதி பங்கேற்பு
காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் பஞ்சபூத சாந்தி பரிகார பூஜை மற்றும் உலக நன்மைக்கான
காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் பஞ்சபூத சாந்தி பரிகார பூஜை மற்றும் உலக நன்மைக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், பசுமை தீர்ப்பாய நீதிபதி டாக்டர் ஜோதிமணி பங்கேற்றார்.
குமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடத்தில் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
ஒக்கி, கஜா, பெய்ட்டி போன்ற புயல்களால் ஏற்பட்ட வரலாறு காணாத பேரழிவுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்கவும், மக்கள் நோய்நொடியின்றி நலமுடன் வாழவேண்டியும், இயற்கையை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் இந்த மந்திராலயத்தில் பஞ்சபூத சாந்தி பரிகார பூஜை மற்றும் உலக நன்மைக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது.
இந்த யாகத்தை மந்திராலய குரு நாம ரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தலைமைவகித்து நடத்தினார். இதில், தென்மண்டல திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுத் தலைவரும், பசுமை தீர்ப்பாய நீதிபதியுமான டாக்டர் ஜோதிமணி, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் விஜயகுமார், தமிழ்நாடு விளையாட்டு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் செளந்தரராஜன், முன்னாள் அரசு வழக்குரைஞர் பாலஜனாதிபதி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.