முகப்பு
கன்னியாகுமரி

கல்குளம் வட்டத்தில்  ரூ. 34 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கல்குளம் வட்டத்தில் ரூ. 34.34 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On : 23 ஜூலை 2018, 7:56 am IST
பகிர்:

கல்குளம் வட்டத்தில் ரூ. 34.34 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கல்குளம் வட்டம், திருவிதாங்கோடு பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.15.73 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் திடக்கழிவு மேலாண்மைத்  திட்டப் பணி மற்றும் முத்தலக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் தடுப்பணை பணி, ரூ.17 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி சேவை மைய கட்டடப் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments