கார் மோதி வியாபாரி சாவு
கன்னியாகுமரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன்னியாகுமரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன்னியாகுமரியை அடுத்த மாதவபுரத்தைச் சேர்ந்தவர் தங்கமணி (64). கடை வியாபாரியான இவர், தற்போது கொட்டாரத்தை அடுத்த பெரியவிளையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் மாதவபுரத்தில் உள்ள கோயில் நிகழ்ச்சிக்காக பெரியவிளையில் இருந்து தங்கமணியும் அவரது மகன் செந்தில்மணியும் பைக்கில் வந்தனராம்.
லீபுரத்தை அடுத்த ஆரோக்கியபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பின்னர் வந்த கார் பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தங்கமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். செந்தில்மணி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.