மார்த்தாண்டம் அருகே நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே தனியார் நிதி நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் அருகே தனியார் நிதி நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அனில்சேகர் (47). அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், அதன் காரணமாக கடந்த சில காலமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலையில் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அனில்சேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.