முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே விபத்தில் தொழிலாளி சாவு

கொல்லங்கோடு அருகே கால்வாய் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:33 am IST
பகிர்:

கொல்லங்கோடு அருகே கால்வாய் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
கொல்லங்கோடு அருகேயுள்ள பாத்திமாநகர், குன்னக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48).  கட்டடத் தொழிலாளி. கேரளத்தில் வேலை செய்து வந்த இவர், தினமும் மோட்டார் சைக்கிளில் பாறசாலை ரயில் நிலையம் வரை செல்வார்.  அங்கிருந்து ரயிலில் வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.  
திங்கள்கிழமை வழக்கம்போல் வேலைக்கு சென்ற செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் அப்பகுதியிலுள்ள கால்வாய்  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து பார்த்தனர். விபத்தில் செல்வராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே இறந்தது தெரியவந்தது. 
சடலத்தை கைப்பற்றி போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.