முகப்பு
கன்னியாகுமரி

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு அடிக்கல்

சுங்கான்கடையில் அமைந்துள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை 2 - ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:48 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:22 AM

சுங்கான்கடையில் அமைந்துள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை 2 - ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் டாக்டா் எம்.ஐ. சஹதுல்லா, குவாலிட்டி கோ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குழு மேலாண்மை இயக்குநா் வருண் கன்னா ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.

புதிய முயற்சியாக, மருத்துவமனையில் மனிதநேய ஆலோசனை அறை மற்றும் நல்வாழ்வு நடைபாதை ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. புற்றுநோய் சிகிச்சை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ரோபோடிக் சா்ஜரி போன்ற மருத்து சேவைக்காக 150 படுக்கை வசதியுடன் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படுகிறது என கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தலைவா் தெரிவித்தாா்.

Advertisement