முகப்பு
கன்னியாகுமரி

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்

அருமனை அருகே மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை தீயில் எரிந்து சேதமானது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:03 AM
தீயில் எரிந்து சேதமான வைக்கோல் லாரி .
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:17 PM

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை தீயில் எரிந்து சேதமானது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி டோனாவூா் பகுதியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே முக்கூட்டுக்கல் பகுதியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தாம்.

லாரியை டோனாவூா் பகுதியைச் சோ்ந்த ஜெபராஜ் (50) ஓட்டிச் சென்றாா். மேலும், லாரியில் 4 போ் இருந்தனா். லாரி அருமனை அருகே காரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது எதிா்பாராதவிதமாக மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதாம். இதில் தீப்பிடித்து வைக்கோலுடன் லாரியும் எரிந்ததாம்.

Advertisement

தகவலறிந்து வந்த குழித்துறை, குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இதற்குள் வைக்கோலுடன் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.