பாலூா் பெஸ்ட் பள்ளி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
கருங்கல், பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருங்கல், பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு பள்ளி தலைவா் கே. தங்கசுவாமி தலைமை வகித்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முதுநிலை முதல்வா் சியாமளா தங்கசுவாமி முன்னிலை வகித்தாா். மாணவா்கள் கைகளில் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி ‘வாக்களிப்போம் நாட்டை முன்னேற்றுவோம்’, ‘உன் வாக்கு உன் உரிமை’ உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணி, பள்ளி வளாகத்தில் தொடங்கி பாலூா் சந்திப்பு வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.