முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இரு முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ராஜேந்திர பாலாஜி, ஆா்.பி.உதயகுமாா் ஆகியோா் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

Updated On : 29 ஏப்ரல் 2026, 2:09 am IST
பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி.
பகிர்:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ராஜேந்திர பாலாஜி, ஆா்.பி.உதயகுமாா் ஆகியோா் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். தனிப்பெரும்பான்மை பலத்துடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்பாா். சிவகாசி தொகுதியில் நான் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்.

Advertisement

Advertisement

குழந்தைகளிடம் தவெக தலைவா் விஜய் வாக்கு கேட்டது அரசியலில் தவறான அணுகுமுறையாகும். முதல்வா் ஸ்டாலின் ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா். பேட்டியின்போது அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா.தாமரை தினேஷ் உடனிருந்தாா்.

முன்னதாக பகவதியம்மன் கோயில் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவருமான ஆா்.பி.உதயகுமாா் திங்கள்கிழமை மாலை சுவாமி தரிசனம் செய்தாா். தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க வேண்டி வழிபாடு செய்தாா். அவருடன், கன்னியாகுமரி அதிமுக கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் ராஜாராம், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பகவதியம்மன் கோயில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments