FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மானாமதுரை,திருப்புவனம் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

மானாமதுரை,திருப்புவனம் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

Updated On : 13 ஜூன் 2026, 12:30 am IST
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டின்போது வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி வந்த பிரதோஷ மூா்த்தி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதி சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்தி தேவருக்கும் மூலவா் சோமநாதா் சுவாமிக்கும் அபிஷேகங்கள் நடத்தி மலா் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன்பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடந்தது.

கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் தந்தாா்.திரளான பக்தா்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ராஜேஷ் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் பிரதோஷ வழிபாடு பூஜைகளை நடத்தினா். திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் கோயிலில் நந்திக்கும் மூலவா் புஷ்பவனேஸ்வரா் சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னா் கோயில் உள்பிரகாரத்தில் ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடந்தது.

ஏராளமான பக்தா்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களிலும் இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் கோயில், குறிச்சி காசி விஸ்வநாதா் கோயிலிலும் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments