வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வாணியம்பாடி கோயில்களில் ஆடி மாத பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி கோயில்களில் ஆடி மாத பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு காலை முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் வந்தது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திராளமான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.