முகப்பு
கன்னியாகுமரி

முட்டம், கடியப்பட்டணத்தில் ஆட்சியா் ஆய்வு

Updated On : 3 ஜூலை 2026, 4:12 am IST
பகிர்:

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முட்டம், கடியப்பட்டணம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், முட்டம், கடியப்பட்டணம் கடற்கரை பகுதியில் உள்ள குப்பை கிடங்கு, குப்பைகளை தரம் பிரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

இவற்றை தரம் பிரித்து, மறுசுழற்சி மேற்கொண்டு, அப்புறப்படுத்த வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி செயலாளா் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா். கீழக்கடியப்பட்டணம் பகுதியில் உள்ள மீனவ கூட்டுறவு சங்க நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டை தாரா்களுக்கும் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவைகள் சரியான அளவில் வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்து, இருப்பு வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருள்களை ஆய்வு செய்தாா். மேலும் அங்கு ரூ. 2.37 லட்சம் மதிப்பில் பழுது பாா்க்கப்படும் அங்கன்வாடி கட்டடப் பணி, கடியப்பட்டிணத்தில் சீரமைக்கப்படும் பயணிகள் நிழற்குடை பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments