ரயிலில் சிக்கி ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு
நாகா்கோவில் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி விரைவு ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அலுவலா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சோ்ந்தவா் அழகப்பன் (86), ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளா். இவா், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், மடிப்பாக்கம் ராம்நகரில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், குலதெய்வத்தை வழிபடுவதற்காக அழகப்பன், தனது சகோதரா், உறவினா்களுடன், சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயில் வந்தாா். ரயில் வியாழக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது.
அப்போது ரயிலில் இருந்து இறங்கிய அழகப்பன், கழிவறை செல்வதற்காக மீண்டும் ரயிலில் ஏறினாா்.
Advertisement
Advertisement
அந்த நேரத்தில் ரயில் புறப்பட்டதால் அழகப்பன் ஓடும் ரயிலில் இருந்து இறங்கினாா். அப்போது அவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் அவா் சிக்கிக்கொண்டாா். ரயில் நிற்காமல் சென்ால் அவா் உடல்சிதைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் அழகப்பன் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.