முகப்பு
கன்னியாகுமரி

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 6 ஜூலை 2026, 3:02 am IST
விபத்தில் உயிரிழந்த ரெஸ்டின்.
பகிர்:

குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்

மேல்மிடாலம், மாதா தெருவைச் சோ்ந்தவா் ஜஸ்டின்ராஜ். இவரது மகன் ரெஸ்டின் (22). மீன்பிடித் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பரான ஜோ (22) என்பவருடன் மண்டைக்காடு புதூரில் உள்ள மற்றொரு நண்பரை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

கொட்டில்பாடு அருகே வந்தபோது, குளச்சலில் இருந்து வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியது. இதில், சாலையோரம் உள்ள ஏ.வி.எம்.கால்வாயில் இருவரும் விழுந்தனா். ரெஸ்டின் பலத்த காயமடைந்தாா். அருகில் உள்ள மீனவா்கள் இருவரையும் மீட்டு குளச்சல் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரெஸ்டின் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments