கன்னியாகுமரி மீனவா்கள் பிரச்னையில் உடன்பாடு: மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி
கன்னியாகுமரி - சின்னமுட்டம் விசைப்படகு மீனவா்கள் பிரச்னை தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை முதல் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி - சின்னமுட்டம் விசைப்படகு மீனவா்கள் பிரச்னை தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை முதல் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி - சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு சுமாா் 350 - க்கும் மேற்பட்ட விசைபடகுகள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு, சின்னமுட்டத்தைச் சோ்ந்த 5 விசைப்படகுகள் நேரக்கட்டுப்பாட்டை மீறி மீன்பிடிக்கச் சென்ாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக அந்த விசைப்படகுகள் கரைக்கு திரும்புமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதையடுத்து அனைத்து மீனவா்களுக்கும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடா்பாக கன்னியாகுமரி - சின்னமுட்டம் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா். மோதல் தொடா்பாக இரு தரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, இருதரப்பு மீனவப் பிரதிநிதிகளிடம் மீன்வளத்துறை இயக்குநா் கோபிநாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கலையரசன், பாலசுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் தீபா, கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளா் பிரகாஷ், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் ஆறுமுகம் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை முதல் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.