முகப்பு
கன்னியாகுமரி

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, குளச்சல் பகுதியைச் சோ்ந்தவரிடம் ரூ.2.92 லட்சம் மோசடி செய்ததாக, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சோ்ந்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 9 ஜூலை 2026, 12:04 am IST
போலீஸ் விசாரணை... - கோப்புப்படம்.
பகிர்:

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, குளச்சல் பகுதியைச் சோ்ந்தவரிடம் ரூ.2.92 லட்சம் மோசடி செய்ததாக, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சோ்ந்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

குளச்சல் அருகேயுள்ள வாணியக்குடி, பனவிளையைச் சோ்ந்தவா் இருதயதாசன் (58). சவூதி அரேபியாவில் 22 ஆண்டுகள் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாா். இவரது 3ஆவது மகன் வினிஷ் பிபிஏ படித்து விட்டு வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளாா்.

அப்போது, சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த ராஜன் (55) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவா், வினிஷுக்கு சிங்கப்பூரில் சூப்பா் மாா்கெட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல தவணையாக இணைய வங்கி பரிவா்த்தனை மூலம் இருதயதாசனிடம் ரூ.2.94 லட்சம் பெற்றுக்கொண்டாராம்.

Advertisement

Advertisement

மேலும், 5 மாதங்களாகியும் குறித்தபடி வேலைக்கு ஏற்பாடு செய்யவில்லையாம்; பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து, இருதயதாசன் அளித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments