முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயற்சி: இருவா் கைது

கனரக லாரியில் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:06 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

கனரக லாரியில் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சோதனைச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனகத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் திக்குறிச்சி சசி மகன் அருண் (25), உதவியாளா் ஆற்றூா் தோட்டவரம் ராஜேந்திரன் மகன் அபினேஷ் (25) ஆகியோரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.