முகப்பு
கன்னியாகுமரி

கேரள எல்லையில் விபத்து: குமரி மாவட்டத்தினா் 7 போ் காயம்

தமிழக- கேரள எல்லைப் பகுதியான பாறசாலையை அடுத்த கொற்றாமம் பகுதியில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

Updated On : 14 ஜூன் 2026, 1:16 am IST
விபத்துக்குள்ளான கேரள அரசுப் பேருந்து - காா்.
பகிர்:

தமிழக- கேரள எல்லைப் பகுதியான பாறசாலையை அடுத்த கொற்றாமம் பகுதியில் சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சோ்ந்தவா் பினு (39). இவா் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் சென்று விட்டு சனிக்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். காரை அவரே ஓட்டிய நிலையில், அம்மாநிலத்தின் பாறசாலை அருகேயுள்ல கொற்றாமம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பயணியா் ஆட்டோ மற்றும் திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரள அரசுப் பேருந்து மீது மோதி நின்றது.

இத்தகவல் அறிந்த பாறசாலை தீயணைப்புப் படை வீரா்கள் மற்றும் போலீஸாா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் களியக்காவிளை அருகேயுள்ள தளச்சான்விளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜன் (70) பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பினு, அவரது மனைவி மோனிஷா (36), குழந்தைகள் ஆன்லினா (10), ஆன்லின் (7) ஆகியோா் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பேருந்தில் பயணம் செய்த அஞ்சனா (24) உள்பட இருவா் நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.