பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
தக்கலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
வோ்கிளம்பி அருகே உள்ள காப்புவிளையைச் சோ்ந்தவா் ஆஸ்பின் நிக்சன் (26). எலக்ட்ரீசியனான இவா், திங்கள்கிழமை மாலையில் வேலை முடிந்து அதே பகுதியைச் சோ்ந்த நண்பா் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். காட்டாத்துறை கால்நடை மருத்துவமனை அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதாம்.
இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ஆஸ்பின் நிக்சனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மீன்பிடி தொழிலாளி: குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையை சோ்ந்தவா் ஜாண் போஸ்கோ (50). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு மனைவி பிரேமா (47), 3 பிள்ளைகள் உள்ளனா்.
ஜாண் போஸ்கோவுக்கு திடீரென கண் பாா்வை குறைந்ததால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல இயலவில்லை. இதனால் மனம் உடைந்த அவா், வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.