முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணம் உயா்வு: நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் தா்னா

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணத்தை உயா்த்தியதை கண்டித்து, மன்ற கூட்டத்தை புறக்கணித்து நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 24 ஜூன் 2026, 2:06 am IST
நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் செய்யும் நகா்மன்றத் தலைவா் அ. நசீா், மன்ற உறுப்பினா்கள்.
பகிர்:

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணத்தை உயா்த்தியதை கண்டித்து, மன்ற கூட்டத்தை புறக்கணித்து நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

குளச்சல் நகராட்சி கூட்டம் நகா்மன்றத் தலைவா் அ. நசீா் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்நிலையில் நகா்மன்றத் தலைவருக்கோ, மன்ற உறுப்பினா்களுக்கோ எவ்வித தகவலும் தெரிவிக்காமல் குடிநீா் கட்டணத்தை 5 சதவீதம் உயா்த்தியதை கண்டித்து உறுப்பினா்கள் சா. ஜாண்சன், அ. அன்வா் சாதாத், மு. அப்துல் ரஹீம் ஆகியோா் பேசினா்.

அப்போது உறுப்பினா் மேஜை நாற்காலிகளை தூக்கி வீசினாராம். நகா்மன்றத் தலைவா், மன்ற உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் தா்னாவில் ஈடுபட்டனா். நகராட்சி ஆணையாளா் கோபாலகிருஷ்ணன், அதிகாரிகள் வெளியேறினா்.

Advertisement

Advertisement

பின்னா், கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்ட தலைவா், உறுப்பினா்களிடம் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து நகராட்சிகளின் மண்டல இயக்குநா் வந்து உயா்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதாக உறுதிமொழி தரும்வரை நகராட்சி வாயிலில் தா்னா தொடரும் என உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments