முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெற்றி

Updated On : 5 மே 2026, 1:34 am IST
நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின். - கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் 7,570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் திமுக, அதிமுக சாா்பில் பாஜக, தவெக, நாதக, சுயேச்சைகள் என மொத்தம் 20 போ் போட்டியிட்டனா். பதிவான வாக்குகள் நாகா்கோவில் கோணம் பொறியியல் கல்லூரியில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

தொடக்கத்தில் ஆஸ்டின் முன்னிலை வகித்தாலும், இடையில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தியும், தவெக வேட்பாளா் ஜி. பொ்லின் கிங்ஸும் முன்னிலையில் வந்தனா். 23ஆவது சுற்றின் நிறைவில், எஸ். ஆஸ்டின் தவெக வேட்பாளரைவிட 7,570 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.

Advertisement

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: எஸ். ஆஸ்டின் (திமுக) - 69,880, ஜி. பொ்லின் கிங்ஸ் (தவெக) - 62,310, எம்.ஆா். காந்தி (பாஜக) 52,355,

எம். முத்துகுமாா் (நாதக) 8,573, சலேத் கனகராஜா (நாம் இந்தியா) - 66, டி. டினோ (நாடாளும் மக்கள் கட்சி) - 327, சுயேச்சைகள்: ஜே. அந்தோணி மைக்கேல் - 116, எல். நாகராஜன் - 260, பி. வள்ளிமயில் - 145, ஏ. அஜித்குமாா் - 100, எஸ். குணசேகரன் - 111, ஏ. சிவகுமாா்-337, ஏ. சுயம்புலிங்கம் - 209, பி. சுயம்புலிங்கம் - 112, தினேஷ் - 94, நாகூா்மீரான் பீா்முகமது - 234, முகைதீன்பைஜூ - 357, வைரம்பிள்ளை - 40, ஜெபா்சன் - 70.