முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் கோடை மழை: அணைகளுக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

Updated On : 10 மே 2026, 2:38 am IST
மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் அணை மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கிய சாரல் மழை விடிய, விடிய பெய்தது. இதேபோல், சனிக்கிழமை மதியம் முதல் சாரல் மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது.

மழை அளவு: சனிக்கிழமை காலை 6 மணியுடன் கூடிய 24 மணி நேரத்தில் மாவட்டத்தில், அதிகபட்சமாக 46.40 மி.மீ., ஆனைக்கிடங்கில் 45.20 மி.மீ., சுருளகோட்டில் 33.60 மி.மீ., சிற்றாறு 1 அணைப் பகுதியில் 31.80 மி.மீ., முக்கடல் அணைப் பகுதியில் 31.40 மி.மீ., பேச்சிப்பாறையில் 27.20 மி.மீ. மழை பாதிவாகியிருந்தது.

Advertisement

Advertisement

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 152 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 133 கன அடி தண்ணீரும் உள்வரத்தாக வந்தது. கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் கொட்டும் மழையிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.