நித்திரவிளை அருகே மீனவா் சடலம் மீட்பு
நித்திரவிளை அருகே தனியாா் இடத்தில் கிடந்த மீனவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
நித்திரவிளை அருகே கோயில் விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பிரடி என்ற குமாா் (45). மீன்பிடித் தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், அவா் அப்பகுதியிலுள்ள தனியாா் இடத்தில் 2 நாள்களுக்கு முன்பு இறந்து கிடந்தாா்.
அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், சடலத்தை நித்திரவிளை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.