முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் ஆக்கிரப்பு கடைகளை அகற்ற உத்தரவு

கன்னியாகுமரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 17 மே 2026, 2:20 am IST
பகிர்:

கன்னியாகுமரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோடை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு வந்த புகாரையடுத்து நகராட்சி ஆணையா் பட்டுசாமி தலைமையில் நகராட்சி மற்றும் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளவா்களிடம் திங்கள்கிழமைக்குள் (மே 18) ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனா். இல்லையெனில் நகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையா் எச்சரித்தாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, பகவதி அம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நகராட்சிப் பொறியாளா் முருகன், நகரமைப்பு அலுவலா் ஷேக் அப்துல் காதா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி, மேற்பாா்வையாளா் பிரதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments