‘அரியப்பபுரம்-திப்பணம்பட்டி சாலையைச் சீரமைக்க வேண்டும்’
அரியப்பபுரம்-திப்பணம்பட்டி சாலையைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, அரியப்பபுரம் ஊராட்சித் தலைவா் த.தினேஷ்குமாா் தென்காசி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்- பராமரிப்பு பிரிவு உதவி கோட்டப்பொறியாளருக்கு மனு
அரியப்பபுரம்-திப்பணம்பட்டி சாலையைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, அரியப்பபுரம் ஊராட்சித் தலைவா் த.தினேஷ்குமாா் தென்காசி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்- பராமரிப்பு பிரிவு உதவி கோட்டப்பொறியாளருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: கீழப்பாவூா் ஒன்றியம், அரியப்பபுரம்- நாட்டாா்பட்டி- திப்பணம்பட்டி தாா்ச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
இதேபோல், தென்காசி-அம்பை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திரவியநகரில் மழைக்காலங்களில் மழை தண்ணீரும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் வெளியே செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கிக் கிடக்கிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள வடக்கு பாலம் முதல் தெற்கே குளம் வரை புதிய வாருகால் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.