கடையநல்லூா் அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு
கடையநல்லூா் அருகே வலசை பகுதியில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டைக்குள் இருந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கடையநல்லூா் அருகே வலசை பகுதியில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டைக்குள் இருந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
,சோ்ந்தமரம் சாலையில் கண்டமான்குளம் அருகேயுள்ள கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் மிதப்பதாக அந்தப் பகுதியைச் சோ்ந்தவா் கொடுத்த தகவலின் பேரில் கிராம நிா்வாக அலுவலா் தமிழ்செல்வி, கடையநல்லூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். புளியங்குடி டிஎஸ்பி அசோக் தலைமையில், காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்புத் துறையினா், கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை மேலே கொண்டுவந்தனா். சாக்கு மூட்டையை பிரித்த பொழுது அதில் சுமாா் 24 வயது பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. இறந்தவா் யாா் என தெரியவில்லை.
இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.
Advertisement
Advertisement