ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்கவுள்ளதாக வெளியான செய்தியை அமெரிக்கா மறுத்திருப்பது பற்றி...
போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானுக்கு அமெரிக்கா ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரான பாகிஸ்தான் முன்னிலையில் ஸ்விட்சா்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் முறைப்படி கையொப்பமிடுகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், லெபனான் மீதான ராணுவ நடவடிக்கைகளை கைவிடுவது, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை பின்வாங்குவது, ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
மேலும், ஈரானின் மறுசீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ. 3,000 கோடி அமெரிக்கா வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டொனால்ட் டிரம்ப், ட்ரூத் சோசியல் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது என்று ஒப்புக்கொண்டுள்ளது! மேலும், அமெரிக்கா ஈரானுக்கு 300 மில்லியன் டாலர்களை வழங்குகிறது என்பது ஜனநாயகக் கட்சியினரால் பரப்பப்பட்ட ஒரு பொய்யான செய்தியாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Reports of providing $300 million to Iran are false! – Trump
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.