முகப்பு
உலகம்

கமேனியின் இறுதிச் சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளோம்! - டிரம்ப் பேச்சு!

அமெரிக்க சுதந்திர நாளான இன்று கமேனியின் இறுதிச்சடங்கு தொடங்கியுள்ளது குறித்து...

Updated On : 4 ஜூலை 2026, 1:27 pm IST
அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ள கொல்லப்பட்ட ஈரானிய தலைவர் கமேனி மற்றும் அவரின் குடும்பத்தினரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள்... - AP
பகிர்:

கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் வெடித்த போர் சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கமேனியின் உடல் வரும் ஜூலை 9 ஆம் தேதி ஈரானின் மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement

அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர நாளான இன்று கமேனியின் இறுதிச்சடங்குகளை ஈரான் அரசு தொடங்கியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும், கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தெஹ்ரானில் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு வரலாற்று தலமாகக் கருதப்படும் மவுண்ட் ரஷ்மோரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் டிரம்ப், கமேனியின் இறுதிச்சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“நாங்கள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளோம். அவர்கள் நிலைபெற மிகவும் விரும்புகிறார்கள். இறுதிச்சடங்கிற்காக அவர்களுக்கு நாங்கள் ஒரு வாரம் விடுப்பு வழங்கியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

summary

Trump has stated that they has declared a week-long holiday to Iran for the funeral of Khamenei.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments