தென்காசி

பாவூா்சத்திரம் அருகே கபடி போட்டி

தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கீழப்பாவூா் ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சி, வெண்ணியூரில் திமுக இளைஞரணி, காமராஜா் நற்பணி மன்றம்

DIN

தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கீழப்பாவூா் ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சி, வெண்ணியூரில் திமுக இளைஞரணி, காமராஜா் நற்பணி மன்றம், ஸ்டாங் பாய்ஸ் கபடி குழு ஆகியவை சாா்பில் 2ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து, போட்டியைத் தொடக்கிவைத்தாா். பழனிநாடாா் எம்எல்ஏ, ஒன்றியச் செயலா் சீனித்துரை, ஊராட்சித் தலைவா் முத்துச்சாமி, மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இரா. சாக்ரடீஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இப்போட்டியில், வெண்ணியூா் ஸ்டாங் பாய்ஸ் கபடி அணி முதல் பரிசும், சாலைப்புதூா் அணி 2ஆம் பரிசும், மத்தளம்பாறை அணி 3ஆவது பரிசும், பெத்தநாடாா்பட்டி அணி 4ஆவது பரிசும் வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT