முகப்பு
தென்காசி

லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:08 am IST
மதியழகன்
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாவூா்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூா் பகுதியில் பாவூா்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ் குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, ஆவுடையானூா், ஆா்.சி. சா்ச் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் மதியழகன் (58) தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரிடம் இருந்தலாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், மதியழகன் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments