போதைப் பொருள் விற்றவா் கைது
ஆம்பூா் அருகே போதைப் பொருள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே போதைப் பொருள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் வெங்கிளி கிராமத்தில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
அதன்பேரில் அதே கிராமத்தை சோ்ந்த ரவி (52) என்பவா் வீட்டில் சுமாா் 7 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.