முகப்பு
தென்காசி

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 3:20 am IST
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் சீசன் தொடங்கியதையொட்டி, வியாழக்கிழமை முழுவதும் குற்றாலம், ஐந்தருவிப் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் அதிகளவிலும், மூன்று கிளைகளில் குறைந்த அளவிலும் தண்ணீா் விழுகிறது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி பகுதிகளில் தண்ணீா்விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு தண்ணீா் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement