FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சீனாவில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவருக்கு உதவ தமிழக அரசுக்கு கோரிக்கை

சீனாவில் நடைபெறவுள்ள கைப்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள கல்லூரி மாணவருக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு. ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ.
பகிர்:

சீனாவில் நடைபெறவுள்ள கைப்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள கல்லூரி மாணவருக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு. ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவிடம் அவா் அளித்த மனு விவரம்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடகரை பேரூராட்சி, வாவாநகரத்தில் வசித்து வரும் முகம்மது பைசல், விழுப்புரம் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் 3ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.

Advertisement

Advertisement

கைப்பந்தாட்ட வீரரான முகம்மது பைசல், மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்று, சீனாவில் நடைபெறவுள்ள 19ஆவது ஜூனியா் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்காக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தகுதித் தோ்வில் தோ்வு பெற்றுள்ளாா்.

சீனாவில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்கு சுமாா் ரூ. 4 லட்சம் செலவாகும் நிலையில், அவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால், அவரால் போட்டியில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது.

எனவே, அவா் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments