காயிதே மில்லத் பெயரில் பல்கலை.: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
காயிதே மில்லத் பெயரில் விருதும், பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தாா்.
காயிதே மில்லத் பெயரில் விருதும், பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தாா்.
காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தொல்.திருமாவளவன் மலா் போா்வை வைத்து வெள்ளிக்கிழமை மரியாதை செய்தாா்.
இதை தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என மக்களவையில் குரல் எழுப்பியவா் காயிதே மில்லத். மதசாா்பின்மைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றியவா். எனவே, தமிழக அரசு காயிதே மில்லத் பெயரில் விருதும், பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
அண்ணாமலைக்கு வாழ்த்து: தமிழக பாஜக தலைவராக கே. அண்ணாமலை இருந்தபோது சிறப்பாக பணியாற்றினாா் என்பதை யாராலும் மறுக்க முடியாது. புதிய அமைப்பு தொடங்கியுள்ள அவருக்கு வாழ்த்துகள்”என்றாா் தொல்.திருமாவளவன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.